இந்திய அணியில் இடமில்லை; வலை பயிற்சியில் ரோகித்: குழப்பத்தில் ரசிகர்கள்

இந்திய அணியில் இடம்பெறாத ரோகித் சர்மா வலை பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியில் இடமில்லை; வலை பயிற்சியில் ரோகித்: குழப்பத்தில் ரசிகர்கள்
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான விளையாட்டு வீரர்கள் அடங்கிய அணியை

பி.சி.சி.ஐ. அறிவித்தது.

இதில் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோகித் சர்மாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று பி.சி.சி.ஐ.யின் மூத்த தேசிய தேர்வு குழு தெரிவித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

காயத்தினால் கடந்த 2 லீக் போட்டிகளில் ரோகித் விளையாடவில்லை. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளது. அதில், இன்றைய பயிற்சியில் ஹிட்மேன் அதிரடி ஆட்டம் ஆடுகிறார் என தெரிவித்து இருந்தது.

இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். காயத்தினால் தேசிய அணி அறிவிப்பில் இருந்து ரோகித் விடுபட்ட நிலையில், வலை பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரோகித்தின் காயங்கள் தீவிர நிலையில் உள்ளது எனில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஏன் அவர் வெளியேறவில்லை என்று சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை படைத்துள்ள ரோகித் விளையாடாதது அணிக்கு அதிக சோதனைகளை ஏற்படுத்தும். இவற்றில் எது உண்மை? என்ற வகையிலும் ரசிகர்களில் சிலர் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com