டிராவிட் அல்ல...கொல்கத்தா அணியின் ஆலோசகராகும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்? - வெளியான தகவல்

கொல்கத்தா அணியின் ஆலோசகராக ஜாக் காலிஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

மும்பை,

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் தங்களது முடிவுகளை அறிவித்தனர். மேலும், டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டதால் அவர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் பதவி காலியாகும். இதையடுத்து இந்திய அணியிலிருந்து விடைபெற்ற ராகுல் டிராவிட்டை தங்களுடைய அணியின் ஆலோசகராக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகர் பதவிக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரரும், ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் ஆடியவருமான ஜாக் காலிஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com