6 மாதங்களாக செல்போன் கூட கிடையாது... உடல்நலம் மட்டுமல்ல நிதி நெருக்கடியிலும் தவிக்கும் வினோத் காம்ப்ளி.. தகவல்

வினோத் காம்ப்ளி நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 மாதங்களாக செல்போன் கூட கிடையாது... உடல்நலம் மட்டுமல்ல நிதி நெருக்கடியிலும் தவிக்கும் வினோத் காம்ப்ளி.. தகவல்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி,(வயது 52) சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன்பு மும்பை அருகே தானேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் அவரது மூளையில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வினோத் காம்ப்ளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலம் தேறிய அவர் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் நடனம் ஆடிய வீடியோ வெளியானது. உடல்நலம் முன்னேறிய நிலையில் வினோத் காம்ப்ளி ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இருப்பினும் அவர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்குரிய ஜெர்சியை அணிந்து கிரிக்கெட் மட்டையை பிடித்தபடி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் வினோத் காம்ப்ளி உடல்நலம் மட்டுமன்றி நிதி நெருக்கடியிலும் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான தகவலின் படி, வினோத் காம்ப்ளியிடம் கடந்த 6 மாதங்களாக செல்போன் கிடையாதாம். இதற்கு முன்னர் ஒரு ஐபோன் வைத்திருந்ததாகவும் அது பழுது பார்ப்பதற்கு ஏற்பட்ட 15,000 ரூபாயை கொடுக்க முடியாததால் அதனை கடைக்காரர் பறிமுதல் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது வீடும் கடனில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வினோத் காம்ப்ளி தற்போது பி.சி.சி.ஐ.-யிடமிருந்து மாதந்தோறும் வரும் ரூ.30,000 ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வினோத் காம்ப்ளிக்கு பல முன்னாள் வீரர்கள் பண உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com