

மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை. எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட் டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில், 2026 ஐபிஎல் இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்று 1: தர்மசாலா.
பிளே ஆப் சுற்று 2 மற்றும் வெளியேற்று்தல் சுற்று 2: முல்லன்பூர்.
இறுதிப்போட்டி: அகமதாபத்.