

லண்டன்,
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், தனக்கு பந்துவீச மிகவும் கடினமாக இருந்த பேட்டர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது வேகம் மற்றும் பவுன்சர்களால் உலகின் முன்னணி பேட்டர்களையே திணறடித்த ஜோப்ரா ஆர்ச்சருக்கு, இந்திய அணியின் ஒரு பேட்டருக்கு எதிராக பந்துவீசுவது மட்டும் பெரிய சவாலாக இருந்துள்ளது. பலரும் அந்த வீரர் விராட் கோலி அல்லது ரோகித் சர்மா என எதிர்பார்த்த நிலையில், ஆர்ச்சர் குறிப்பிட்ட பெயர் அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை கே.எல். ராகுல் தான்.
2018 மற்றும் 2019 ஐபிஎல் சீசன்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கே.எல். ராகுல் அபார பார்மில் இருந்தார். அந்த காலகட்டத்தில் ராகுலுக்கு எதிராக பந்துவீசுவது மிகவும் சவாலாக இருந்ததாக ஜோப்ரா ஆர்ச்சர் கூறினார்.
விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், கே.எல். ராகுலின் பெயரை ஜோப்ரா ஆர்ச்சர் குறிப்பிட்டிருப்பது இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.