சூர்யகுமார் அல்ல...டி20 கிரிக்கெட்டில் இவர்தான் முதல் இரட்டை சதம் அடிப்பார் - கிளாசென் பேட்டி

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

சென்சூரியன் ,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 61ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசென் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

டி வில்லியர்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பின்புறம் விளையாடுவதில் தனித்துவமானவர்கள். இவர்கள் இருவரும் விளையாடும் விதத்தில் கலவையான ஒரு ஷாட்டை நான் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். இவர்கள் இருவரும் பந்தை பின்புறமாக நேராக அடிக்கக் கூடியவர்கள்.மேலும் சூர்யகுமார் பைன் லெக்கில் அடிக்கும் சுப்லா ஷாட் எனக்கு வேண்டும்.

நான் இப்படியான ஷாட்டை விளையாடியது இல்லை.மேலும் கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் ஹசிம் அம்லா. அதே சமயத்தில் தற்போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரட்டை சதத்தை அடிக்கக்கூடிய வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் இருப்பார். டி20 கிரிக்கெட்டில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com