இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலை இல்லை - இங்கிலாந்து வீரர்


இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலை இல்லை - இங்கிலாந்து வீரர்
x

image courtesy: AFP

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக டக்கெட் கூறியுள்ளார்.

அகமதாபாத்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக் மைதானங்களில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 3 - 0 என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியாவிடம் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தாலும் கவலையில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபியில் பார்முக்கு திரும்பி இறுதிப்போட்டியில் இந்தியாவையே தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக அவர் நம்பிக்கை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் இங்கே சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வேண்டும் என்ற ஒரு விஷயத்திற்காக மட்டுமே வந்துள்ளோம். ஒருவேளை 3 - 0 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோற்றாலும் அவர்களை சாம்பியன்ஸ் டிராபி பைனலில் தோற்கடிக்கும் வரை நாங்கள் கவலைப்பட மாட்டோம். இவை அனைத்தும் சரியான நேரத்தில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவதைப் பற்றியதாகும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றியை நெருக்கமாக நெருங்கினோம். அதனால் இத்தொடரில் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எப்போதும் எடுத்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.

1 More update

Next Story