இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: 157 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 157 ரன்களில் நியூசிலாந்து அணி சுருண்டது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: 157 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து
Published on

நேப்பியர்,

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் நேப்பியரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.

உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் இது என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தெரிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மார்டின் குப்தில் ( 5 ரன்கள்) கோலின் முண்ட்ரோ ( 8 ரன்கள்) ஆகியோரை சமி அடுத்தடுத்து வீழ்த்தினார். இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து நியூசிலாந்து அணி தத்தளித்தது.

கேப்டன் வில்லியம்ஸ்சன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரைசதம் விளாசினார். அவரைத்தவிர ஏனைய பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்த வில்லியம்சனையும் (64 ரன்கள்) குல்தீப் யாதவ் பெவிலியனுக்கு அனுப்பினார். 38 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி 157 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சமி 3 விக்கெட்டுகளையும் அள்ளினர். இதையடுத்து, இந்திய அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com