ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ் ஓய்வு அறிவிப்பு


ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ் ஓய்வு  அறிவிப்பு
x

Image : PTI 

மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

மெல்போர்ன் ,

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் 19ம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் ஸ்டாய்னிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்டாய்னிஸ் 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1, 495 ரன்களை எடுத்துள்ளார் .மேலும் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் .

ஓய்வு தொடர்பாக ஸ்டாய்னிஸ் கூறியதாவது ,

ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது ஒரு நம்பமுடியாத பயணமாகும், நான் பெற்ற ஒவ்வொரு தருணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எளிதான முடிவு அல்ல, எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இது சரியான நேரம் என்று நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story