ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம்.. கேமரூன் கிரீன் மாபெரும் சாதனை


ஒருநாள் கிரிக்கெட்: 47 பந்துகளில் சதம்.. கேமரூன் கிரீன் மாபெரும் சாதனை
x
தினத்தந்தி 24 Aug 2025 2:13 PM IST (Updated: 24 Aug 2025 5:36 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேமரூன் கிரீன் சதம் விளாசினார்.

மெக்காய்,

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இருவரும் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 250 ரன்கள் குவித்த நிலையில் பிரிந்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 142 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் சதம் அடித்த நிலையில் அவுட்டானார்.

அதன்பின் கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி கூட்டணி ரன் வேகத்தை கணிசமாக உயர்த்தினர். குறிப்பாக தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கேமரூன் கிரீன் வெறும் 47 பந்துகளில் சதம் விளாசினார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. மேக்ஸ்வெல் - 40 பந்துகள்

2. கேமரூன் கிரீன் - 47 பந்துகள்

3. மேக்ஸ்வெல் - 51 பந்துகள்

4. பவுல்க்னெர் - 57 பந்துகள்

தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 431 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீன் 118 ரன்களுடனும், கேரி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.

1 More update

Next Story