ஒருநாள் கிரிக்கெட்: அஸ்வினின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஹர்ஷித் ராணா


ஒருநாள் கிரிக்கெட்: அஸ்வினின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஹர்ஷித் ராணா
x

imag courtesy: BCCI

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தையும் சேர்த்து இதுவரை இந்தியாவுக்காக 8 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அதில் ஹர்ஷித் ராணா 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்காக முதல் 8 ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற அஸ்வினின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 16 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

அந்த பட்டியல்:

1. அகர்கர்/ பிரசித் கிருஷ்ணா - 19 விக்கெட்டுகள்

2. பும்ரா - 17 விக்கெட்டுகள்

3. அஸ்வின்/ஹர்ஷித் ராணா - 16 விக்கெட்டுகள்

1 More update

Next Story