ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இன்று மோதல்

162 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி ஆட்டம் டிராவில் முடிந்தது
ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இன்று மோதல்
Published on: 

புதுச்சேரி,

இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' கிரிக்கெட் அணிகள் இடையிலான தொடர் புதுச்சேரியில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டி கொண்ட அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) தொடரில் முதலாவது ஆட்டத் தில் இந்தியா 162 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்ததாக இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி புதுச்சேரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி பகல்-இரவாக நடக் கிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உடல் தகுதியை எட்டாததால் அவருக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கேவும். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு தேர்வாகி இருப்பதால் நமன் திருக்கு பதிலாக அனுகுல் ராயும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய 'ஏ' அணியில் இடம் பெற்றிருந்த ஜேக் எட்வர்ட்ஸ், தென்ஆப்பிரிக்க தொடருக்கான அணியில் இடம் பிடித் ததாலும், ஆரோன் ஹார்டி காயத்தாலும் விலகினர், அவர்களுக்கு பதிலாக ரிலே மெரிடித், வில் சுதர்லேண்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com