ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு
Published on

துபாய்,

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் வருடாந்திர புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி இந்திய அணி (118 புள்ளி) முத லிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து அணி (113 புள்ளி) 2-வது இடத்திலும், நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி (109 புள்ளி) 3-வது இடத்தி லும் மாற்றமின்றி தொடருகின்றன. தென்ஆப்பிரிக்க அணி (102 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி (98 புள்ளி) ஒரு இடம் சரிந்து 5-வது இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளி யிடப்பட்ட 20 ஓவர் போட்டி அணிக்கான தரவரிசையிலும் இந்தியா முதலி டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com