ஒருநாள் கிரிக்கெட்: சிறந்த 5 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்... பும்ராவுக்கு இடமில்லை

image courtesy: AFP
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்து விளங்கிய 5 பவுலர்களை ஜாகீர் கான் தேர்வு செய்துள்ளார்.
மும்பை,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய டாப் 5 வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் தற்சமயம் உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை தேர்ந்தெடுக்காத அவர், இந்தியாவை சேர்ந்த எந்த வீரரையும் தேர்வு செய்யாமல் அதிர்ச்சி அளித்துள்ளார்.
அந்த வகையில் ஜாகீர் கான் தேர்வு செய்த சிறந்த 5 வேகப்பந்து வீச்சாளர்கள்:-
1. வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)
2. கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா)
3. வாக்கர் யூனிஸ் (பாகிஸ்தான்)
4. சமிந்த வாஸ் (இலங்கை)
5. டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா)






