ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; தமிம் இக்பால் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: @BCBtigers
Image Courtesy: @BCBtigers
Published on

டாக்கா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்று,ம் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 546 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தொடரின் முதலாவது போட்டி அடுத்த மாதம் 5ம் தேதி சட்டோகிராமில் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மொஹமது நைம், ஆபிப் ஹொசைன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். வங்கதேச அணியை தமிம் இக்பால் வழிநடத்துகிறார்.

ஆப்கானிஸ்தான் தொடருக்கான வங்கதேச அணி விவரம்:-

தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜிமுல் ஹொசை ஷாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், டெளகிட் ஹிரிடோய், மெஹதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், தஸ்கின் அகமது, எபாடட் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மக்முத், ஷோரிபுல் இஸ்லாம், ஆபிப் ஹோசைன், மொஹமது நைம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com