ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் விலகல்

Image Courtesy: @ICC
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
கெய்ன்ஸ்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். வலது கணுக்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






