மைதானத்தில் ஆக்ரோஷம்... ஸ்டம்புகளை உதைத்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்

நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
மைதானத்தில் ஆக்ரோஷம்... ஸ்டம்புகளை உதைத்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
Published on

கொல்கத்தா,

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் மும்பை அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின்போது 10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். அத ஓவரின் 4வது பந்தை வீசிவிட்டு, 5வது பந்தை வீச சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஆவேசமடைந்த பாண்ட்யா, ஸ்டம்புகளை வேகமாக உதைத்தார். பாண்ட்யாவின் இந்த செயல், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ ஹர்திக் பாண்டியா மீறியதாகும்.

இதையடுத்து, கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதிக்குறைப்புப் புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது. பாண்டியா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, போட்டி நடுவர் ராஜீவ் சேத் விதித்த அபராதத்தை ஏற்றுக்கொண்டார். ஹர்திக் பாண்ட்யா பந்துவீசியபோது, ரோவ்மேன் பவல் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com