வரலாற்றில் இன்று: 100வது சதம்… உலகை வியக்க வைத்த சச்சின் டெண்டுல்கர்

2012-ம் ஆண்டு இதேநாளில் தனது 100வது சதத்தை சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்தார்
வரலாற்றில் இன்று: 100வது சதம்… உலகை வியக்க வைத்த சச்சின் டெண்டுல்கர்
Published on

சென்னை,

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சாதனையாக கருதப்படும் தனது 100வது சர்வதேச சதத்தை சச்சின் கடந்த 2012-ம் ஆண்டு இதே நாளில் பதிவு செய்தார்.

2012-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேசத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சச்சின் இந்த மைல்கல்லை எட்டினார். மிர்ப்பூரில் நடைபெற்ற அந்த ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பான இன்னிங்ஸ் ஆடி சதம் விளாசினார்.

Also Read
பிப்ரவரி மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது… பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்த 6 நட்சத்திரங்கள்!
வரலாற்றில் இன்று: 100வது சதம்… உலகை வியக்க வைத்த சச்சின் டெண்டுல்கர்

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 114 ரன்கள் எடுத்தார்.

இந்த மைல்கல்லை இதுவரை வேறு யாரும் எட்டியதில்லை. உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனை ஒரு மிகப் பெரிய மைல்கல்லாக ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் இன்றும் நினைவுகூரப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com