

புதுடெல்லி,
முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20ந்தேதி தம்புல்லாவில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக பார்ம் இன்றி தடுமாறும் 35 வயதான யுவராஜ்சிங் அதிரடியாக கழற்றி விடப்பட்டார். விக்கெட் கீப்பர் டோனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
தென்ஆப்பிரிக்காவில் நடந்த முத்தரப்பு ஏ அணி தொடரில் அசத்திய மனிஷ் பாண்டேவுக்கு அணிக்கு திரும்பியுள்ளார். சீனியர் பவுலர்கள் முகமது ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகுர் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரஹானே, கேதர் ஜாதவ், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகுர்.