ஒரு நாள் போட்டி தரவரிசை: டாப் 5க்குள் இடம் பிடித்த மிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் போட்டி தரவரிசையில் டாப் 5க்குள் வந்துள்ளார்.
ஒரு நாள் போட்டி தரவரிசை: டாப் 5க்குள் இடம் பிடித்த மிதாலி ராஜ்
Published on

பிரிஸ்டல்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், அதிரடியாக அடித்து ஆடினார். அவர் 41.1வது ஓவரில் அரை சதம் விளாசினார். இங்கிலாந்தில் 50 ரன்களுக்கு மேல் அவர் எடுத்தது இது 13வது முறையாகும். அதன்பின் 72 ரன்கள் (108 பந்துகள், 7 பவுண்டரிகள்) எடுத்து போல்டானார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 22 ஆண்டுகள் விளையாடியுள்ள அனுபவம் பெற்ற அவர், ஒரு நாள் போட்டி தரவரிசையில் டாப் 5 இடத்திற்குள் வந்துள்ளார். அவர் 3 இடங்கள் முன்னேறி 5வது இடம் பிடித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருக்கு பின்பு அவர் மீண்டும் டாப் 5க்குள் வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com