தற்போதைய இந்திய அணியில் மாறி இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால்.. -மந்தனா

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

புதுடெல்லி,

8 அணிகள் பங்கேற்கும் 13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வருகிற 30-ந் தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் மந்தனா அளித்த பேட்டியில், இந்திய அணியின் நம்பிக்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக நினைக்கிறேன். உங்களது உழைப்புக்கு ஏற்ப அது மாறுபடும். முயற்சி இருக்கும்போது, போராட்டமும் எப்போதும் இருக்கும். தற்போதைய இந்திய அணியில் மாறி இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் ஒவ்வொருவரும் தங்களை போட்டியை வென்று கொடுக்கும் திறன் படைத்தவர்களாக (மேட்ச் வின்னர்ஸ்) நம்புகிறார்கள்.

வரும் உலகக்கோப்பை போட்டியை நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 2013-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் கூட்டம் எந்த மாதிரி இருக்கும், அவர்கள் எப்படி ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்பதை பார்க்க உற்சாகமாக இருக்கும். மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் அதிக அளவிலான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பழக்கம் இருப்பதால் எங்களுக்கு பெரிய அளவில் அழுத்தம் இருக்காது. அத்துடன் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்காக ஆரவாரம் செய்யும் ரசிகர்களை எதுவும் மிஞ்ச முடியாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com