’எங்களது பீல்டிங் சரியில்லை..’ - குஜராத் கேப்டன் சுப்மன் கில் புலம்பல்

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு அணியிடம் குஜராத் அணி பணிந்தது.
’எங்களது பீல்டிங் சரியில்லை..’ - குஜராத் கேப்டன் சுப்மன் கில் புலம்பல்
Published on

தர்மசாலா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு தர்மசாலாவில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நிர்ணயித்த 255 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் 162 ரன்னில் அடங்கியது. இந்த தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது;

'12-13 ஓவர் வரை நாங்கள் நன்றாகவே விளையாடினோம். எங்களது பீல்டிங், தரத்துக்கு ஏற்ப மெச்சும்படி இல்லை. சில கேட்ச் வாய்ப்புகளை (3 கேட்ச் மற்றும் ஒரு ரன்-அவுட் வாய்ப்பு) நழுவ விட்டோம். நெருக்கடியான சூழலில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது போன்ற ஆடுகளத்தில் 'பவர்-பிளே'யில் நல்ல தொடக்கம் கிடைத்திருந்தால், எந்த இலக்கையும் துரத்திப் பிடித்திருக்க முடியும்'.

இவ்வாறு அவர் கூறினார். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்தாலும் குஜராத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அந்த அணி நாளை இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com