

அகமதாபாத்,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து சுப்மன் கில் கூறியதாவது;
”இந்த ஆடுகளத்தில் 200 முதல் 210 ரன்கள் என்பது ஒரு சராசரி ஸ்கோர்தான். ஆனாலும் நாங்கள் இலக்கை விரட்டிப்பிடிக்க நன்றாக பேட்டிங் செய்தோம். நாங்கள் அதிக கேட்சுகளைத் தவறவிட்டோம். எங்கள் பீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
நாங்கள் ஒரு குறிப்பிட்ட தரத்தை நிர்ணயித்துவிட்டு, 3 எளிதான கேட்சுகளைத் தவறவிட்டோம். இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறத் தகுதியற்றவர்கள். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்து மீண்டு, அகமதாபாத்திற்குத் திரும்பிச் சென்று, ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதற்கேற்ப அடுத்த ஆட்டத்திற்கு திட்டமிட வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.