தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லக்னோ,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் அடங்கிய 20 ஓவர் போட்டி தொடர் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. முன்னதாக நடந்த ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க அணி அதே உத்வேகத்துடன் விளையாடி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. தென்ஆப்பிரிக்க அணி தொடரை முழுமையாக கைப்பற்ற முழு முயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றியை ருசிக்க இந்திய அணி கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com