

புதுடெல்லி,
மத்திய அரசின் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் 9 விளையாட்டு பிரபலங்களும் அடங்குவர். டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார்.
இதே போல் பாராஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று சாதித்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா, பிரமோத் பகத் (பேட்மிண்டன்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்) மற்றும் ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரமானந்த் சங்வ்வால்கர், தற்காப்பு கலை வீரர்கள் கேரளாவின் 93 வயதான சங்கரநாராயணா மேனன், ஜம்மு காஷ்மீரின் பைசல் அலி தர் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
பாராஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற முதல் இந்தியரான ஈட்டி எறிதல் வீரர் ராஜஸ்தானைச் சேர்ந்த 40 வயதான தேவேந்திர ஜஜாரியா பத்மபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.