அமெரிக்காவில் ரசிகரை தாக்க முயன்ற பாக். கிரிக்கெட் வீரர்.... வீடியோ வைரல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவரை பாகிஸ்தான் முன்னணி வீரர் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
image courtesy:AFP
image courtesy:AFP
Published on

புளோரிடா,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வீழ்ந்த்து. இதனால் கடைசி 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரரான ஹரிஸ் ரவுப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், ரசிகரை தாக்க முயல்வது போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஹரிஸ் ரவுப் தன்னுடைய மனைவியுடன் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் ரவுப்பை நோக்கி ஏதோ சொல்கிறார். இதனால் கோபமடைந்த ஹரிஸ் ரவுப் ரசிகரை தாக்க முயல்கிறார். பின்னர் அவர் ரசிகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதனப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே அந்த ரசிகர் இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று ஹரிஸ் ரவுப் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பதிலளித்த அந்த ரசிகர், தான் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com