பாகிஸ்தான் தாக்குதல் - ஐ.பி.எல். போட்டி பாதியிலேயே நிறுத்தம்

image courtesy: IndianPremierLeague twitter
பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தர்மசாலா,
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த நிலையில், பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர்.






