பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் திடீர் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் திடீர் ராஜினாமா
Published on

இஸ்லமபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதேபோல், பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிசும் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதமே எஞ்சியுள்ள நிலையில் பயிற்சியாளர்கள் விலகியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இடைக்கால பயிற்சியாளர்களாக சக்லைன் முஸ்தாக் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் தற்போதைக்கு நியமிக்கப்படுவதாக பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜா வரும் 13 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில் இருவரும் ராஜினாமா செய்து இருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com