பாகிஸ்தான் தொடர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி

கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக தாமதமாகத் தான் அணியுடன் இணைந்தனர்.
பாகிஸ்தான் தொடர்:  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்கள். இதில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக தாமதமாகத் தான் அணியுடன் இணைந்தனர்.

ஆஸ்திரேலிய அணி வருகிற 23-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரை வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் மே 31-ந்தேதி வரை நடக்கும் ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்பார்களா? என்ற சந்தே கம் எழுந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களை ஐ.பி.எல்.-ல் கடைசி வரை ஆடுவதற்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஒருவேளை டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் போனால் ஸ்டார்க், கேமரூன் கிரீன், மிட் செல் மார்ஷ் ஆகியோர் வருகிற 24-ந்தேதி லீக் சுற்று முடிந்ததும் கிளம்புவ தற்கு வாய்ப்புள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com