தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு
x

கோப்புப்படம்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.

கராச்சி,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஒருநாள் தொடர் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் நவம்பர் 11ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் டி20 அணி விவரம் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்) : சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜுனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, ஷகிப்சடா பர்ஹான் (விக்கெட் கீப்பர்), சைம் அயூப், ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் தரிக்.

ரிசர்வ் வீரர்கள்: பக்கார் ஜமான், ஹாரிஸ் ரவூப், சுபியான் மொஹிம்.

பாகிஸ்தான் ஒருநாள் அணி விவரம் (தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர்): ஷாகின் ஷா அப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஹ்ச்ரப், பைசல் அக்ரம், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசீபுல்லா, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம் ஜுனியர், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா.

1 More update

Next Story