பாகிஸ்தான் சூப்பர் லீக்: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அதிக தொகைக்கு ஒப்பந்தம்

8 அணிகளும் மொத்தம் 103 வீரர்களை வசப்படுத்தின.
பாகிஸ்தான் சூப்பர் லீக்: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் அதிக தொகைக்கு ஒப்பந்தம்
Published on

லாகூர்,

8 அணிகள் இடையிலான 11-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (மார்ச்) 26-ந் தேதி தொடங்குகிறது. பி.எஸ்.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் லாகூரில் நேற்று முன்தினம் நடந்தது. 8 அணிகளும் மொத்தம் 103 வீரர்களை வசப்படுத்தின.

சியல்கோட் ஸ்டாலியன்ஸ் அணியால் நேரடி ஒப்பந்தம் செய்யப் பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு ரூ.4.53 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் பி.எஸ்.எல். லீக் வரலாற்றில் அதிக தொகை பெறும் வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா ரூ.2.80 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராவல்பிண்டி அணி வாங்கியது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை ரூ.2.55 கோடிக்கு கராச்சி கிங்ஸ் எடுத்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com