பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: லாகூர் அணி வீரர் கிறிஸ் லின் சதம் அடித்து அசத்தல்

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில், லாகூர் அணி வீரர் கிறிஸ் லின் சதம் அடித்து அசத்தினார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்: லாகூர் அணி வீரர் கிறிஸ் லின் சதம் அடித்து அசத்தல்
Published on

லாகூர்,

5-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ்- லாகூர் காலண்டர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த முல்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக குஷ்தில் ஷா 70 ரன்கள் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய லாகூர் அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிறிஸ் லின் (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) 113 ரன்கள் (55 பந்து, 12 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி அமர்க்களப்படுத்தினார். பி.எஸ்.எல். போட்டியில் லாகூர் அணி வீரர் அடித்த முதல் சதம் இது தான். இந்த வெற்றியின் மூலம் லாகூர் அணி முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. கொரோனா பரவல் காரணமாக, ஸ்டேடியத்திற்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com