பாகிஸ்தான் சூப்பர் லீக்: வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 போட்டி நேற்று தொடங்கியது
பாகிஸ்தான் சூப்பர் லீக்: வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து
Published on

இஸ்லாமாபாத்,

6 அணிகள் இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 போட்டி நேற்று தொடங்கியது.மே 18-ந்தேதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com