

ராவல்பிண்டி,
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4 ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நான்கு நாட்களை கடந்தும், இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் முடியவில்லை. ஆட்டத்தின் கடைசி நாளில் தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 77 ஓவர்கள் விளையாடி விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடித்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு கொடுக்கப்பட்ட ராவல்பிண்டி ஆடுகளம் குறித்து ஐசிசி கூறுகையில், ரவல்பிண்டி ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிற்கும் சமமான பங்களிப்பை கொடுக்கவில்லை. ஐந்து நாட்களில் ஆடுகளத்தின் தன்மை மாறவில்லை. குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வேகம் மற்றும் பவுண்ஸ் கிடைக்கவில்லை. இதனால், ராவல்பிண்டி ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது என மதிப்பிடுவதாக ஐசிசி கூறியுள்ளது.