இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி
Published on

கராச்சி,

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கராச்சியில் நடக்க இருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 11-வது சதம் கண்ட பாபர் அசாம் 115 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 54 ரன்னும் எடுத்தனர். பின்னர் 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷீகன் ஜெயசூர்யா 96 ரன்னும், தசுன் ஷனகா 68 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் ஷின்வாரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com