அதிகமுறை ஆட்ட நாயகன் விருது- ரோகித் சர்மாவுடன் இணைந்த பாண்டியா

ஹர்திக் பாண்டியா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார்
அதிகமுறை ஆட்ட நாயகன் விருது- ரோகித் சர்மாவுடன் இணைந்த பாண்டியா
Published on

மும்பை,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத் தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப் வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹர்திக் பாண்டியா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

டி20 உலகக் கோப்பையில் இது அவரின் 3-வது ஆட்ட நாயகன் விருது ஆகும். அதன்மூலம் ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

விராட் கோலி 8 முறை ஆட்ட நாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்று 2-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com