

கென்பெரா,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா, இலங்கையில் இத்தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள நாடுகள் தங்கள் அணியின் வீரர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டரான பேட் கம்மின்ஸ் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். முதுகு வலி, காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
பேட் கம்மின்சுக்கு பதிலாக பென் வார்ஷன்ஸ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அணியில் மேத்திவ் ஷாட் இடம்பெற்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக மேட் ரென்ஷா அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.