ஆஷஸ் தொடரை தவறவிடும் பேட் கம்மின்ஸ்... காரணம் என்ன...?


ஆஷஸ் தொடரை தவறவிடும் பேட் கம்மின்ஸ்... காரணம் என்ன...?
x

கோப்புப்படம்

தினத்தந்தி 8 Oct 2025 4:45 PM IST (Updated: 8 Oct 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வரும் நவம்பர் 21-ம் தேதி பெர்த்தில் தொடங்கி ஜனவரி 8ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் 40 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், தொடரின் துவக்க ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதுகு வலி காரணமாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் மட்டும் அல்லது தொடர் முழுவதும் கம்மின்ஸ் அணியில் இருந்து விலகுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்க ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சுக்குப் பெயர்போன ஆஸ்திரேலிய அணியில், கம்மின்ஸுக்குப் பதிலாக ஸ்காட் போலண்ட் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இது பெருத்த பின்னடைவாகவும், 2011 முதல் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்டில்கூட வெற்றி பெறாத இங்கிலாந்து அணிக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

1 More update

Next Story