ஜோஸ் பட்லரை எனது 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன் -ராஜஸ்தான் அணியின் சகவீரரின் மனைவி அதிரடி

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்காஸ்டில் பேசிய லாரா ஜோஸ் பட்லரை தனது இரண்டாவது கணவராக ஏற்றுக்கொண்டதாக கேலி செய்தார்.
ஜோஸ் பட்லரை எனது 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன் -ராஜஸ்தான் அணியின் சகவீரரின் மனைவி அதிரடி
Published on

மும்பை

தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர்-ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் சீசனில் பட்லர் 16 போட்டிகளில் விளையாடி 824 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 சந்தங்கள் அடங்கும் (அவருக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ளது) 2016 ஐபிஎல்லில் கோலி மற்றும் டேவிட் வார்னர் முறையே 973 மற்றும் 848 ரன்கள் எடுத்தனர்.

பட்லரின் பேட்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தது. முதல் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்தாலும், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. 158 ரன்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஏற்கனவே 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வைத்துள்ள பட்லர் இந்த போட்டியிலும் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். 60 பந்துகளில் 106 ரன்கள் அடித்த பட்லர் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. இவரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் பட்லர் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் கோலி 4 சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறையும் பட்லர் ஒரு பெரிய ஷாட்டை அடிக்கும் போது அல்லது ஒரு மைல்கல்லை அடையும் போது, கேமிரா வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை மையமாக காட்டும். அப்போது கேமிராவில் சிக்குவது சகவீரர் ரஸ்ஸி வான் டெர் டசென் மனைவி லாராவாம். பல ரசிகர்கள் லாராவை ஜோஸ் பட்லரின் மனைவி என்று தவறாக நினைக்கிறார்கள். ரஸ்ஸி வான் டெர் டசெனின் மனைவியான லாரா ராஜஸ்தான் ராயல் அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

லாரா ஐபிஎல் போட்டிகளை யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தன்ஸ்ரீ வர்மாவுடன் அமர்ந்து அணியை உற்சாகப்படுத்துவதை அடிக்கடி பார்க்கலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் போட்காஸ்டில் பேசிய லாரா ஜோஸ் பட்லரை தனது இரண்டாவது கணவராக ஏற்றுக்கொண்டதாக கேலி செய்தார். பட்லரின் மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த வாரம் ஐபிஎல்லின் பயோ-பப்பில் அவருடன் இணைந்தனர்.

இதுகுறித்து லாரா கூறியதாவது:

நான் ஜோஸின் மனைவி என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் அவர் சிக்சர் அடிக்கும் போது சில முறை கேமராவில் இருந்ததால் அவ்வாறு நினைக்கிறேன். மேலும் தனஸ்ரீயும் நானும் உற்சாகத்தில் துள்ளிகுதிக்கிறோம் எங்களால் எங்களை கட்டுப்படுத்த முடியாது. அத்னால் ஒருவேளை நான் அவருடைய குடும்பத்தின் ஒரு பகுதியாக நினைத்துக்கொண்டிருக்கலாம், இது மிகவும் சுவாரஸ்யமானது.

ரஸ்ஸி ஐபிஎல்லில் அதிகம் விளையாடாததால், அதே உணர்வை அவரிடம் காட்ட முடியவில்லை. அதனால் ஜோசுக்கான உற்சாகத்தை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு அதை அனுபவிப்பேன் என கூறினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அனியில் ரூ.1 கோடியில் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட ரஸ்ஸி, இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2வது தகுதிச் சுற்றில் அவர் விளையாடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com