பாகிஸ்தானுடன் நேரடி போட்டிக்கு அனுமதி ? மத்திய அரசு விளக்கம்

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடவும் அனுமதி இல்லை.
பாகிஸ்தானுடன் நேரடி போட்டிக்கு அனுமதி ? மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் விளையாட்டு உறவு மேலும் மோசமடைந்து விட்டது. ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தது சர்ச்சையானது. தாங் கள் வென்ற ஆசிய கோப்பையை பாகிஸ்தான் மந்திரி மொசின் நக்விடம் இருந்து வாங்க இந்திய வீரர்கள் மறுத்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் எத்தகைய விளையாட்டு கொள்கையை பின்பற்றுவது என்பது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளை யாட்டு ஆணையத்துக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'பாகிஸ் தானுடன் நேரடி போட்டித் தொடர்களுக்கு (இரு நாடுகள் இடையிலான போட்டி) விதிக்கப்பட்டுள்ள தடை தொடருகிறது. இதன்படி பாகிஸ்தானில் நடைபெறும் எந்த ஒரு நேரடி போட்டிகளிலும் இந்தியா பங்கேற்காது. இதே போல் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடவும் அனுமதி இல்லை.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் நடைபெறும் சர்வதேச மற்றும் பல நாடு கள் பங்கேற்கும் போட்டிகளை பொறுத்தவரை சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் வழிகாட்டுதலையும், நமது வீரர்களின் சொந்த நலனையும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கிறோம். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த அணிகள், அவர்களின் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச விளை யாட்டு நிகழ்வுகளில் இந்திய அணியும், தனிப்பட்ட வீரர்களும் கலந்து கொள்வார்கள். இதே போல் இந்தியாவில் நடத்தப்படும் பல நாடுகள் இடையிலான போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், அவர்களின் வீரர்களும் பங்கேற்க அனுமதி உண்டு.

இந்தியாவை எல்லோரும் விரும்பும் ஒரு விளையாட்டு மையமாக நிலை நிறுத்தும் வகையில் இங்கு நடக்கும் சர்வதேச போட்டிகளுக்கு வரும் வீரர் கள், அதிகாரிகள், தொழில்நுட்ப குழுவினர், விளையாட்டு அமைப்பினருக் கான விசா வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com