பிக்பாஷ் டி20 லீக்: சிட்னியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெர்த்


பிக்பாஷ் டி20 லீக்: சிட்னியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெர்த்
x

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

பெர்த்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற சிட்னி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறக்கிய பெர்த் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பின் அலென் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி 15 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சிட்னியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய பெர்த் அணியின் பிராட்மென் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிட்னியை வீழ்த்தியதன் மூலம் பிக்பாஷ் தொடரின் இறுதிப்போட்டிக்குள் பெர்த் அணி நுழைந்தது.

1 More update

Next Story