மச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன் - களத்தில் வாஷிங்டன் சுந்தர் பேசியதை பகிர்ந்த ரிஷப் பண்ட்

வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி, உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
மச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன் - களத்தில் வாஷிங்டன் சுந்தர் பேசியதை பகிர்ந்த ரிஷப் பண்ட்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் மோசமான நிலையில் தவித்த இந்திய அணியை அரைசதம் (62 ரன்) அடித்து நிமிர வைத்தார். 2-வது இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் 22 ரன்கள் விளாசி வெற்றிக்கு துணைநின்றார். அத்துடன் இந்த டெஸ்டில் மொத்தம் 4 விக்கெட் கைப்பற்றியும் அசத்தினார்.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடியது இலக்கை சேஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இருவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வாகை சூடியது. இதுகுறித்து மனம் திறந்துள்ள ரிஷப் பண்ட், போட்டி விறுவிறுப்பாக சென்ற சமயத்தில், அதிரடி ஆட்டத்தால் இலக்கை நோக்கி ஆட்டத்தை நகர்த்துகிறேன், மச்சான், நான் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி சுந்தர் அதிரடியாக விளையாடியதாக ரிஷப் பண்ட் புகழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com