

மும்பை,
ரஞ்சி டிராபி 2025-2026 சீசனில் ஜம்மு-காஷ்மீர் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கர்நாடகாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. வரலாற்று சாதனைப் படைத்துள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில், 'முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு-காஷ் மீர் அணிக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி அணி யின் குறிப்பிடத்தக்க மன உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தை பிரதிப லிக்கிறது. இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெருமையான தருணம். மேலும் இது அங்கு வளர்ந்து வரும் விளையாட்டு ஆர்வத்தையும், திற மையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த சாதனை பல இளம் விளையாட்டு வீரர்களை பெரிய கனவுகள் காணவும் மேலும் விளையாடவும் ஊக்குவிக் கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.