மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்டு நியமனம்

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொல்லார்டு நியமனம்
Published on: 

மும்பை,

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அணியுடன் நீண்டகாலமாகப் பயணித்து வரும் பொல்லார்டுக்கு தற்போது தலைமைப் பயிற்சியாளர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2010-ஆம் ஆண்டு முதல் தொடர்பில் இருக்கும் பொல்லார்டு, வீரராக அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து 2022 சீசனுக்குப் பிறகு ஓய்வு பெற்ற அவர், கடந்த நான்கு சீசன்களாக அணியின் பேட்டிங் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார்.

தற்போது தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கும் பொல்லார்டு, தனது விளையாட்டு அனுபவத்தையும் டி20 கிரிக்கெட் பற்றிய ஆழமான புரிதலையும் பயன்படுத்தி அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மஹேலா ஜெயவர்தனே மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பொல்லார்டின் தலைமையில் மீண்டும் வலுவான அணியாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com