

மும்பை,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 47-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் மிட்சேல் மார்ஷ் 44 ரன்கள் எடுத்தார். ஜோஸ் இங்கிலிஷ் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சன் செய்தார். அவர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 8 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இறுதியில் மார்க்ரம் 31 ரன்களும், ஹிம்மத் சிங் 40 ரன்களும் எடுக்க, லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.