

கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள சூழலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா - இந்தியா கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரியத்தின் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது. இரு அணியில் உள்ளவர்களுக்கும் தினமும் பரிசோதனை நடத்தப்படும் எனவும் தொற்றுக்குள்ளாகும் வீரர் தனிமைப்படுத்தப்படுவாரே தவிர கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்படாது எனவும் மருத்துவக்குழு கூறியுள்ளது.