தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் தள்ளிவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் தள்ளிவைக்கப்பட்டது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் தள்ளிவைப்பு
Published on

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வருகிற ஜூன் மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தொடரை தள்ளிவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து முடிவு செய்து நேற்று அறிவித்துள்ளன. இந்த போட்டி தொடருக்கான புதிய தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதில் ஒருநாள் போட்டி தொடர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய ஒருநாள் லீக் போட்டியின் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஜேக்யூஸ் பால் கருத்து தெரிவிக்கையில், போட்டியை தள்ளிவைத்து எடுத்து இருக்கும் முடிவு வேதனை அளிக்கிறது. எங்களது சர்வதேச போட்டி அட்டவணை அனுமதிக்கும் பட்சத்தில், சகஜ நிலை திரும்பியதும் விரைவில் இந்த போட்டி தொடர் மீண்டும் நடத்தப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com