

சண்டிகர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.இந்த போட்டி தொடரில் இன்று நியூ சண்டிகாரில் இரவு நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது.பஞ்சாப் பிரியன்ஷி ஆர்யா, கூப்பர் கனொலி இருவரும் லக்னோ அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பிரியன்ஷி ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்களும் , கூப்பர் கனொலி 46 பந்துகளில் 87 ரன்களும் எடுத்தனர்.
இதனால் பஞ்சாபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது.