பந்து தாக்கி காயமடைந்த முதியவரிடம் நலம் விசாரித்த பிரியன்ஷி ஆர்யா

காயமடைந்த முதியவரிடம் பிரியன்ஷி ஆர்யா பேசி நலம் விசாரித்தார்.
பந்து தாக்கி காயமடைந்த முதியவரிடம் நலம் விசாரித்த பிரியன்ஷி ஆர்யா
Published on

சண்டிகர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நியூசண்டி காரில் நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் வீரர் பிரியன்ஷி ஆர்யா அடித்த பந்து மைதானத்தில் இருந்த முதியவர் ஒருவரை தாக்கியது. பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்ததால் அவரது முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தது.இதனால் பதற்றமடைந்த மற்ற ரசிகர்கள், காயமடைந்த அவரை முதுலுதவி சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில், காயமடைந்த முதியவரிடம் பிரியன்ஷி ஆர்யா வீடியோ காலில் பேசி நலம் விசாரித்தார். மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com