இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்களில் நழுவிய வெற்றி - மனம் திறந்த நேபாள கேப்டன்

அடுத்து, நேபாள அணி வருகிற 12-ம் தேதி மும்பையில் இத்தாலி அணியை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்களில் நழுவிய வெற்றி - மனம் திறந்த நேபாள கேப்டன்
Published on

சென்னை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துகின்றன. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நேபாளத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள வீரர்கள் அதிரடியாக விளையாடினர். கடைசி பந்து வரை சென்ற இப்போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி நேபாளத்தை வீழ்த்தியது.

Also Read
டி20 உலகக் கோப்பை: நேபாளம் அணியை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்களில் நழுவிய வெற்றி - மனம் திறந்த நேபாள கேப்டன்

இந்நிலையில், போட்டியில் 4 ரன்களில் தோல்வியடைந்தது குறித்து நேபாள அணியின் கேப்டன் ரோஹித் பௌடல் மனம் திறந்து பேசினார். அவர் பேசுகையில்,

எனது அணி வீரர்களின் ஆட்டத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போட்டியில் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும், 100 சதவீதம் எங்களது உழைப்பை கொடுத்துள்ளோம்.

நாங்கள் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அதே நேரத்தில், போட்டியில் பங்கேற்க மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை,” என்றார்.

அடுத்து, நேபாள அணி வருகிற 12-ம் தேதி மும்பையில் இத்தாலி அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com